கமல்ஹாசனைப் பின்பற்றி உடல்தானம் செய்த ரோபோ சங்கர்

2

 

நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. உலகநாயகனின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவரை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெறுவது ரோபோ சங்கரின் வழக்கம். இந்த முறை வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை அகர்வால் கண் மருத்துவமனையில் நடத்தினர். அதில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர் கமல்ஹாசனைப் பின்பற்றி தானும் முழு உடல் தானம் செய்வதாக அறிவித்தார். வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று அவரை நேரில் சந்தித்து முழு உடல் தானத்திற்காக சான்றிதழைக் காண்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் ரோபோ சங்கர். தான் ரசிக்கும் நடிகரைப் பின்பற்றி அவரது பாணியில் உடல் தானம் செய்த ரோபோ சங்கரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.