புரட்சி தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி என்ற ஆளுமைகள் சினிமாவை ஆண்டபோது அவர்களுடன் தனது பயணத்தையும் லட்சியத்தோடு மெற்கொண்டவர் எஸ்.எஸ்,ராஜேந்திரன். லட்சிய நடிகர் என்று இவருக்கும் ஒரு பட்டம் இருக்கிறது இந்த பட்டத்துக்கு காரணம் அவர் பெரியாரின் கொள்கையில் பிடிப்பு கொண்டவர் மட்டுமல்ல கோவிலுக்கு செல்ல மாட்டர். புராண படங்களில் நடிக்க மாடார். சம்பூர்ண ராமாயணம் படத்தில், பரதனாக நடிக்க அழைத்தபோது.பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டதால் நடிக்க மறுத்துவிட்டார்.
எஸ் எஸ் ஆர் என்றாலே கணீர் குரலில் அவர் பேசும் வசனங்களில் தமிழின் அனல் தெறிக்கும். தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன முதல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். தி.மு.க. மீது பற்று கொண்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், படங்களில் நடித்த படியே, கட்சிக்காக நாடகங்கள் நடத்தி, நிதி திரட்டிக் கொடுத்தார். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார்.1957-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் எஸ்.எஸ்.ஆர். போட்டியிட் டார். தி.மு.கழகம், தேர்தலில் போட்டியிட்டது அதுவே முதல் தடவை. எஸ்.எஸ். ஆருக்கும், சேலம் தொகுதி யில் போட்டியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் உதய சூரியன் சின்னம் கிடைக்காததால், சேவல் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், காஞ்சீ புரம் தொகுதியில் போட்டியிட்ட அறிஞர் அண்ணா, குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் கருணாநிதி உள்பட 15 பேர் வெற்றி பெற்றனர். நெடுஞ்செழியன், எஸ்.எஸ்.ஆர். இருவரும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.
பின்னர் 1962-ல் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தேனியில் எஸ்.எஸ்.ஆர். போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். எஸ்.எஸ்.ஆர். பிரசாரம் செய்தபோது, அவர் மீது திராவகம் வீசப்பட்டது. அப்போது அவர் ஒதுங்கிக் கொண்டதால் மயிரிழையில் தப்பினார். இந்த தேர்தலில் எஸ்.எஸ்.ஆர். வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் டெல்லி மேல்-சபைக்கு (ராஜ்ய சபை) தேர்ந்தெடுக்கப்பட்டு “எம்.பி” ஆனார். பின்னர் அ.தி.மு.க.வில் சேர்ந்து, 1981-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவராக பதவி வகித்தார்.
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நினைவு தினமான இன்று அவரின் மகன் SSR கண்ணன் மற்றும் ‘தேசிய தலைவர்’ படத்தின் ஹீரோ பஷீர், இயக்குனர் அரவிந்தராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.