’ஏலே’ பட கதையை 3 முறை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட சமுத்திரக்கனி

114

கிராமத்தில் சைக்கிளில் சென்று குச்சி ஐஸ் விற்பவராக சமுத்திரக்கனி  நடிக்கும் படம் ஏலே. இதில் மணிகண்டன், மதுமதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேபில் நடந்தது. இதில் சமுத்திரக்கனி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

ஏலே படப்பிடிப்புக்கு முதல் நாள் சென்றபோது என்னை பிணமாக நடிக்க வைத்தார்கள். முதல் காட்சியிலேயே பிணமாகவா என்று எண்ணினேன். நான் கண்ணை மூடி படுத்துக்கொள்வேன். என்னை சுற்றி ஊர்காரர்கள் அமர்ந்து அழுவார்கள். அம்மாவாக நடித்த ஒருவரின் மகன் கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இறந்திருக்கிறார். அவர் தன் மகன் இழப்பை நினைத்து என்னை நெஞ்சில் அடித்து அடித்து அழுதார். நான் கண் விழித்து அவரை சமாதானம் செய்தேன்.

இதில் என் மகனாக நடித்திருக்கும் மணிகண்டன் நல்ல நடிப்பு திறமை கொண்ட வர். பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். ஏலே கதையை ஹலிதா 9 வருடத்துக்கு முன் என்னிடம் சொன்னார். பிறகு 3 வருடத்துக்கு முன்பு சொன்னார். மீண்டும் என்னை அணுகி ஏலே படம் தயாராக உள்ளது. புஷ்கர் காயத்ரி,ஒய்நாட், ரிலையன்ஸ் போன்றவர்கள் இணைந்து தயாரிக்கின்றனர். நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். நடிப்பது என்பது முடிவாகிவிட்டதால் மீண்டும் ஏலே கதையை சொல்லச் சொன்னேன். 3 முறையை இக்கதையை கேட்டிருக்கிறேன்.

ஹலிதா எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். ஆனால் படப்பிடிப்பில் அவர் வேறுமாதிரி இருப்பார்.  பிடிவாதம் அதிகம் இந்த காட்சி வேண்டும் என்றால் அதைஎடுத்தே தீர்வார். அங்கு ஒரு இயக்குனராக சாமி ஆடுவார். அதுவும் சிரித்தபடி சாமி ஆடிவிடுவார். நான் பள்ளிக்கூட பெண்ணாக சிறுமியாக பார்த்த ஹலிதா இன்றைக்கு இப்படி வளர்ந்து நிற்கிறார். ஆனால் இதுவல்ல அவரது உயரம் இன்னும் பெரிய இடத்துக்கு வருவார். ஏலே படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர்  தேனி ஈஸ்வர் பணியும் படத்துக்கு பெரிய பிளஸ். இசையும் நன்றாக வந்திருக்கிறது. இது அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்
இவ்வாறு சமுத்திரகனி கூறினார்.

இயக்குனர் ஹலிதா சமீம் பேசும்போது,’ ஏலே தான் நான் முதலில் இயக்குவதற் காக எழுதிய ஸ்கிர்ப்ட். ஆனால் பூவராம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி இயக்கி னேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏலே படத்தின் கதையை புஷ்கர் காயத்ரியிடம் கூறி இருந்தேன் அவர்கள் தயாரிப்பதாக கூறி இருந்தார்கள் அது இப்போது நடந்திருக்கிறது. சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி உள்ளிட்ட எல்லோரு மே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கி றார்கள். இசையும் பாடல் களும் பொருத்தாக அமைந் தது. ஏற்கனவே இந்த படத்தை நான் எடிட் செய்திருந்தேன். மேலும் 20 நிமிடம் குறைக்க ரேமண்ட்டிடம் கொடுத்தேன். அவர் அதனை நன்றாகவே செய்து முடித்தார்’ என்றார். பத்திரிகை தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர் அனைவரையும் வரவேற்றனர்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) நிறுவனமும் ரிலையன்ஸ் எண்டர்டெயின் மெண்ட் (Reliance Entertainment) நிறுவனமும் இணைந்து  ஏலே படத்தை வழங்குகிறது. எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை இணை தயாரிப்பு செய்துள்ளார் சக்ரவர்த்தி ராமசந்திரா. படைப்பாளிகள் புஷ்கர் & காயத்திரி ( விக்ரம் வேதா புகழ் ) Wallwatcher Films சார்பில் முதல் படைப்பாக இப்படத் தினை கிரியேட்டிவ் புரடக்சன் செய்துள்ளனர்.
இசை காபெர் வாசுகி, அருள் தேவ். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர். கலை இயக் கம்  வினோத் ராஜ்குமார். படத் தொகுப்பு ரேமண்ட் டெரிக் கிரஸ்டா, ஹலிதா சமீம். சண்டைப்பயிற்சி சூப்பர் சுப்பராயன். வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.