சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்

3

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி. இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம். ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மன் குமார் புரொடக்சன் #5வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இன்று பூஜையுடன் பாடல்பதிவு ஆரம்பமானது.

ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா. எடிட்டிங் சிவ நந்தீஸ்வரன். கலைஇயக்கம் மிலன். சண்டைப் பயிற்சி அன்பறிவு. நிர்வாகத் தயாரிப்பு கிருபாகரன் ராமசாமி. தயாரிப்பு மேற்பார்வை ஏ பால் பாண்டியன். மக்கள் தொடர்பு ஏ. ஜான்.

கிராமப் பின்னணியில் பிரம்மாண்ட, ஆக்ஷ்ன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.