நடிகர் சத்யராஜ் சகோதரி காலமானார்

3

காங்கிரசை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன் அர்ஜுன் மன்றாடியார். இவர் காங்கேயம் தொகுதி முன்னாள் திமுக எம் எல் ஏவான ராஜ்குமாரின் உடன் பிறந்த தம்பியும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா தத்தகாடையூர் அருகே உள்ள பழையகோட்டை அரண்மனை சீரப்பள்ளத் தோட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 4 ஆணடுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி கல்பனா மன்றாடியார் (வயது 66). இவர் நடிகர் சத்யரஜின் உடன் பிறந்த தங்கை ஆவார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒருவாரமாக கோவை தனியார் மருத்துவமனையில் கல்பனா சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை உயிரிழந்தார். மறைந்த என்.அர்ஜுன் மன்றாடியார், ஏ.கல்பனா தம்பதிக்கு ஏ. மகேந்திர் என்ற மகன் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.