திரையுலக மார்கண்டேயன் சிவகுமார் எனும் நூலகம்..

நூறாண்டு காலம் வாழ்க

16

திரையுலக மார்கண்டே யன் சிவகுமாருக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு ஃபிலிம்நியூஸ் 24X7 சார்பில் மனநிறைந்த வாழ்த்துக்கள்.


சிவகுமார் ஒரு நடிகர் என்று யாராலும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. அவர் ஒரு நூலகம். திரையுலகில் எத்தனையோ ஜாம்வான்கள் இருந்தனர். இவர்கள் அத்தனைப்பேரையும் பற்றி நுணுக்கமாக அறிந்து வைத்தி ருப்பவர் சிவகுமார்.

சினிமா துறைப்பற்றி ஒரு சிலருக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை அவர்கள் கூட சிவகுமார் என்றதும் எழுந்து நின்று வணக்கம் சொல்ல வைக்கும் பண்பாளராக திகழ்கிறார் .
கோயமுத்தூரில் ஆலந்துறை என்ற குக்கிராமத்தில் பிறந்த வர். பள்ளிப்படிப்பை முடிப்பதற்கே கஷ்டத்தில் உழன்றவர். அவரது தாயார் தனக்கில்லை என்றாலும் பிள்ளைக்கு வேணுமே என்று வயிற்ரை கட்டி வாயை கட்டி வளர்தார். அந்த தாயை சிவகுமார் நினைக்காத நாள் இல்லை. அவரது நினைவாக பள்ளி மாணவர்களுக்கு அந்த காலம் முதலே பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறார். ஒரு குழந்தை படித்தால் அந்த குடும்பம் வாழும் என்பது அவர் கொள்கை அந்த பணியை தற்போது அவரது மகன்கள் இருவரும் ஏற்று செவ்வனே செய்து வருகின்றனர்.சென்னைக்கு வந்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார் சிவகுமார். சினிமாவில் இவர் ஏற்காத பாத்திரம் கிடையாது. எந்த பாத்திரமோ அந்த பாத்திரமாக மாறிவிடுவார். 1965 ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி இவரது முகம் தமிழக மெங்கும் ஏவிஎம் தயாரித்த காக்கும் கரங்கள் படம் வெள்ளித்திரையில் தோன்றி யது. ஓவிய கலைஞன் சினிமா நடிகராக மாறிய அந்தநாள் தொடங்கி அவரது பயணம் திரையுலகில் தொடர்ந்தது. 1966ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி அறிஞர் அண்ணா தலைமையில் நடந்த நாடகத்தில் நடித்தார்.

 

சிவகுமார் டைரி எழுதும் பழக்கம் கொண்டவர் . அதில் புரட்டினால் இந்திய வரலாற்றின் முக்கால்வாசி நிலவரத்தை தெரிந்துக் கொள்ளலாம். 1967, ஜனவரி 12: கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துவரும் எம்.ஜி.ஆர் அவர்கள் ராமாவரம் தோட்டத் தில் சுடப்பட்டார் சம்பவம் என்ற சம்பவமும் அவரது டைரியில் இடம் பிடித்திருக்கிறது.. இப்படி எத்தையோ ஆயிரம் தகவல்கள் அதில் உள்ளன.

மகன்கள் சூர்யா, கார்த்தி, மகள் பிருந்தா, மனைவி லட்சுமி என இனிமையான அவரது குடும்பம் சினிமாவுலகிற்கே ஒரு எடுத்துக்காட்டு. அப்பா சொன்ன சொல்லை இன்றைக் கும் சூர்யா, கார்த்தி யாரும் தட்டமாட்டார்கள். அப்பா சிவகுமாரால் அந்த குடும்பத் துக்கு பெருமை, பிள்ளை களால் தந்தை சிவகுமாருக்கு பெருமை.
சினிமா தளத்திலிருந்து டிவி சீரியலிலும் சிவகுமார் நடித்தார்.௭த்தனை மனிதர்கள் (1997), சித்தி (1999-2001) அண்ணாமலை (2002-2005).
மேலும் அவர் சிறந்த எழுத்தாளர் என்பதை இது ராஜபாட்டை அல்ல, கம்பன் என் காதலன், டைரி(1945-1975)  தமிழ் சினிமா வில் தமிழ் என்ற நூல்கள் மூலம் நிரூபித்தார்.

படித்தது போதும் என்று ஒருநாளும் அவர் ஒய்ந்த தில்லை. நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் கம்பராமாயணம், மகா பாரதம் கரைத்துக் குடித்தார். மேடை களில் இந்த காலத்து பாணிக்கு ஏற்ப பல கல்லூரிகளில் சொற் பொழி, அதுவும் பாரத, ராமாயண பாடற் குறிப்புடன் உரையாற்றியிருக்கிறார். அவரது பயணம் இன்னும் நூறாண்டு தொடர வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.