பழம்பெரும் நடிகர் ஶ்ரீகாந்த் காலமானார்

ரஜினிகாந்த் இரங்கல்

4

டைரக்டர் ஶ்ரீதர்  இயக்கிய வெண்ணிற ஆடை படம் மூலம் அறிமுகமானவர் நடிகர்  ஸ்ரீகாந்த். பின்னர் சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், முத்துராமன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சிவாஜி போலீஸ் அதிகாரியாக நடித்த தங்கப்பதக்கம் படத்தில் அவரது மகனாக நடித்து புகழ்பெற்றதுடன் சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சுமார் 200  படங்களில் நடிததிருக்கிறார்  நடித்திருக்கும் ஶ்ரீகாந்த்  கடந்த சில மாதமாக வே  உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர்  காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஶ்ரீகாந்த் ஐயப்ப பக்தர் ஆவார். மறைந்த நடிகர் நம்பியார் குருசாமி தலைமையில் பல ஆண்டுகள் ஶ்ரீகாந்த் சபரி மலை சென்றுவருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீகாந்த். மறைவுக்குப் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஶ்ரீகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கி றது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.