எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான தினமின்று

2

 

நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனை இலட்சிய நடிகர் என்று குறிப்பிட்டனர்,

லட்சிய நடிகர்” என்ற பட்டம், வந்தது பற்றி எஸ்.எஸ். ராஜேந்திரன் கூறிய தாவது:-

“நான் 8 வயதில் இருந்தே கோவிலுக்கு செல்வது இல்லை. பெரியாரின் கொள்கை யில் ஈடுபாடு இருந்ததால், புராணப் படங்களில் நடிக்க வில்லை. புராண நாடகத் தில் மட்டும் நடித்து இருக்கி றேன்.”முதலாளி”, “தை பிறந்தால் வழி பிறக்கும்” ஆகிய படங்களைத் தொடர்ந்து, எனக்கு நிறைய படங்கள் வந்தன. புராணப் படங்களில் நடிப்பதற்குக்கூட பலர் அழைத்தார்கள். சம்பூர்ண ராமாயணம் படத்தில், பரதனாக நடிக்க முதலில் என்னைத்தான் அழைத் தார்கள்.
பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை முழுமை யாக ஏற்றுக்கொண்ட காரணங்களினால்,புராணப் படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன். என் கொள்கைக்கு முரணான எந்தப் படத்திலும் நான் நடித்தது இல்லை. இதனால்தான் “லட்சிய நடிகர்” என்று எனக்கு பெயர் வந்தது. பெரியாரும், அண்ணாவும் மேடைகளில் பேசும்போது என்னை “லட்சிய நடிகர்” என்றுதான் குறிப்பிடு வார்கள்.”

*தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன முதல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந் திரன்

தி.மு.க. மீது பற்று கொண்ட எஸ்.எஸ். ராஜேந்திரன், படங்களில் நடித்த படியே, கட்சிக்காக நாடகங்கள் நடத்தி, நிதி திரட்டிக் கொடுத்தார். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார்.1957-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் எஸ்.எஸ்.ஆர். போட்டியிட் டார். தி.மு.கழகம், தேர்தலில் போட்டியிட்டது அதுவே முதல் தடவை. எஸ்.எஸ். ஆருக்கும், சேலம் தொகுதி யில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் உதய சூரியன் சின்னம் கிடைக்காததால், சேவல் சின்னத்தில் போட்டியிட் டனர். இந்தத் தேர்தலில், காஞ்சீ புரம் தொகுதியில் போட்டியிட்ட அறிஞர் அண்ணா, குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் கருணாநிதி உள்பட 15 பேர் வெற்றி பெற்றனர். நெடுஞ் செழியன், எஸ்.எஸ்.ஆர். இருவரும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

பின்னர் 1962-ல் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தேனியில் எஸ்.எஸ்.ஆர். போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். எஸ்.எஸ்.ஆர். பிரசாரம் செய்தபோது, அவர் மீது திராவகம் வீசப்பட்டது. அப்போது அவர் ஒதுங்கிக் கொண்டதால் மயிரிழையில் தப்பினார். இந்த தேர்தலில் எஸ்.எஸ்.ஆர். வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
தேர்தலில் எஸ்.எஸ்.ஆர். வெற்றி பெற்றது குறித்து சிவாஜிகணேசன் கூறும் போது, “தேர்தலில் போட்டி யிட்டு சட்டமன்ற உறுப்பின ரான முதல் நடிகர் எனது நண்பர் எஸ்.ஆர்.ஆர் தான்” என்றார். “சாரதா” என்ற படத்தின் டைட்டிலில் எஸ்.எஸ். ராஜேந்திரன் எம்.எல்.ஏ. என்று பெயருடன் வெளியானது.

*”எம்.பி” ஆனார்*

தி.மு.க. ஆட்சி காலத்தில் டெல்லி மேல்-சபைக்கு (ராஜ்ய சபை) தேர்ந்தெடுக் கப்பட்டு “எம்.பி” ஆனார். பின்னர் அ.தி.மு.க.வில் சேர்ந்து, 1981-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவராக பதவி வகித்தார்.

Leave A Reply

Your email address will not be published.