1987-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெங்களூரில் வசித்து வந்த தேங்காய் சீனிவாசனின் சித்தி மரணம் அடைந்ததால் 16-ம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேங்காய் சீனிவாசன் தன் குடும்பத் தினருடன் பெங்களூர் சென்றிருந்தார். நிகழ்ச் சியில் கலந்து கொண்டு விட்டு பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை எடுத்து குடும்பத் தினருடன் தங்கினார்.
இரவு அவருக்கு “திடீர்” என்று பக்கவாத நோய் ஏற்பட்டது. உடனே அவரை பெங்களூர் சாந்தி நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்து பாதிக்கப் பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர் கள் சந்தேகித் தார்கள். எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்ய தீர்மானித்தனர்.
ஆனால் இதே 9-11-(1987) அன்று அதிகாலையில் அவர் நினைவு திரும்பாம லேயே மரணம் அடைந் தார். தேங்காய் சீனிவாச னின் உடல் “வேன்” மூலம் சென்னைக்கு கொ ண்டு வரப்பட்டு, சென்னை கோபாலபுரம் ராமசாமி தெருவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது.
நடிகர் – நடிகை களும் திரை உலக பிரமுகர்களும் திரளாக வந்திருந்து மரியாதை செலுத்தி னார்கள். மறுநாள் தேங்காய் சீனிவாசனின் உடல் தகனம் செய்யப் பட்டது. தேங்காய் சீனிவாசனின் மனைவி பெயர் லட்சுமி. கீதா, ராஜேஸ்வ ரி என்ற 2 மகள்கள். சிவசங்கர் என்ற ஒரே மகன்.
தமிழ் சினிமாவில் “நகைச்சுவை”, “வில்லன்”, “குணச்சித்திரவேடம்”, “கதாநாயகன்” என்று சினிமாவில் ஆல்ரவுண்ட ராக விளங்கியவர் தேங்காய் சீனிவாசன்.