முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு வடிவேலு ரூ. 5 லட்சம் வழங்கினார்

1

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின நடிகர் வடிவேலு இன்று நேரில் சந்தித்து  முதல்வர் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ. 5 லடசம் வழங்கினார்.

பின்னர் வடிவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தா. அவர் கூறியதாவது:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார்.முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளேன்.

ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கொரோனாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். இது மக்களுக்கு பொற்காலம்.கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார் .

தமிழக முதல்-அமைச்சரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார்.

அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

“மாஸ்க் போடுங்கப்பானா நாங்களாம் தேக்கு ணே , போ… ணே , போ… ணே னு சொல்றான் ; யப்ப தேக்குனாலும் கொரோனா அரிச்சிரும்பா…!” .

இப்ப திடீர்னு கொங்குநாடு -ன்னு ஒரு சப்ஜெக்ட், ஹூம்.. நல்லா இருக்கிற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு. நாடு, நாடு என தனித்தனியாக பிரித்தால் என்னாவது ?. நான் அரசியல் பேசல. இதெல்லாம் பேசும்போது தல சுத்துது.

Leave A Reply

Your email address will not be published.