பத்திரிகையாளர்கள் நலனுக்காக பிரபல நட்சத்திரங்கள் ஆடி பாடல்

புதிய இசை ஆல்பம் விரைவில் ரிலீஸ்!

1

 

பத்திரிகையாளர்களின் நலனுக்காக நடிகர்கள் பாடி நடித்துக் கொடுத்த பாடல் விரைவில் வெளி யாகிறது.

தமிழ் திரைப்பட பத்திரி கையாளர் சங்கம்(TMJA) பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. கொரானா வைரஸ் காலங்களில் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு, அடிப்படைத் தேவைகளில் எந்த குறைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

மேலும், திரைப் பிரபலங் களான அஜித், சிவகார்த்தி கேயன், ஜெய், கார்த்தி போன்றோர் பெரும் துணையாக இருந்து ஆதரவளித்து வருகின் றனர் .

மேலும் சங்கத்தின் அடுத்த கட்டமாக பத்திரிகையாளர் களின் நலன் கருதி முதல் முறையாக சங்க உறுப்பி னர்களின் உடல்நலனில் மற்றும் குடும்ப நலனில் அக்கறை கொள்ளும் விதமாக ,தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும் முயற்சியில் சங்கம் இறங்கியுள்ளது. இதற் காக தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட உள்ளனர்.

பத்திரிகையாளர் கவிதா பாடல்களை எழுத, AR.ரகுமானின் இசை பள்ளி மாணவரும், “குட்டி ஸ்டோரி” புகழ் இசை அமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாதன் இசை அமைப்பில், அவரோடு பிரித்வீ இணைந்து பாடியுள்ளார்.

எடிட்டிங் பணியை தேசிய விருது பெற்ற எடிட்டர் வி.ஜே. சாபு ஜோசப் செய்கிறார். “பிக்பாஸ்” புகழ் சாண்டி மாஸ்டர் நடன ஒருங்கிணைப்பு செய்ய நடிகர்கள் சசிகுமார் , ஆர்யா, ஜிவி பிரகாஷ், கிருஷ்ணா, குக் வித் கோமாளி அஷ்வின்,புகழ்,, , சூரி, யோகி பாபு, மகேந்திரன், மகத், மைக்கேல், கீர்த்தி சுரேஷ், ஜனனி, சாக்ஷி அகர்வால், ரைசா, ஷெரின், சஞ்சிதா ஷெட்டி, அதுல்யாரவி, அம்மு அபிராமி ஆகியோர் இந்தப் பாடலுக்கு நடித்துக் கொடுத்துள்ளார்கள். விரைவில் பாடலை பிரபல மானவர்கள் வெளியிட உள்ளனர். திரைப் பிரபலங்கள் பலரும் ஆர்வத்தோடு ஆதரவு கொடுத்தமைக்கு எங்கள் தமிழ் திரைப்பட பத்திரி கையாளர் சங்கத்தின் சார்பில் மனசு நிறைந்த நன்றிகள்.?

Leave A Reply

Your email address will not be published.