நடிகை கயல் ஆனந்தி திருமணம் இணை இயக்குனரை மணந்தார்

11

நடிகை ’கயல்; ஆனந்தி க்கும் இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இத்திருமணம் தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தலால் நெருங்கிய திரையுலக நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். மணமகன் சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மச்சான் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், பின்னர் இரு வீட்டாரின் சம்மதம் பெற்று இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது..

Leave A Reply

Your email address will not be published.