ராஜமவுலி படப்பிடிப்பில் நவம்பரில் பங்கேற்கும் அலியாபட்..

12

தேசமே கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த மீண்டும் களமிறங்குகிறார். ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்த இயக்குநர் ராஜமவுலியும் அவரது RRR திரைக்குழுவும், தற்போது கொமாரம் பீம் ஆக என்டிஆர் மின்னும் அவதாரத்தை வெளியிட்டுள்ளனர். எல்லோரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் வகையிலேயே அந்தத் தோற்றம் உள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்ட என்டிஆரின் ‘பீம்’ லுக் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதுவரை அவரை இத்தகைய தோற்றத்தில் பார்த்திருக்கவில்லை என ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜமவுலி, தற்போது ராம் சரண், என்டிஆருடன் இணைந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பெரும் இடைவேளைக்குப் பின்னர், அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நவம்பரில், ஆலியா பட் படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிகிறது. அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ் ஆகியோர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். எப்போது என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

2021 ரிலீஸுக்கு RRR தயாராகிக் கொண்டிருக்கிறது. இது இந்தியத் திரையுலகின் மிகப் பிரம்மாண்ட திரைப்படம், மொழிகள் கடந்து பல திரை நட்சத்திரங்களை கதைக் களத்தில் கொண்டுள்ளது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியிடப்படுகிறது. RRR பட்ஜெட் மிக மிக பிரம்மாண்டமானது. ரூ.450 கோடி செலவில் உருவாகும் இப்படம், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி புனையப்பட்ட கதை.

Leave A Reply

Your email address will not be published.