நடிகை ஜெயசித்ரா கணவர் கணேஷ் காலமானார்

17

எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார், ஜெய்சங்கர், ரஜினி, கமல்  என பிரபல நடிகர்களுடன் நடித்தவர் பிரபல நடிகை ஜெயசித்ரா.  கணவரும், இசையமைப்பாளர் அம்ரிஷின் தந்தையுமான  கணேஷ் திருச்சியில் இன்று காலமானார் அவருக்கு வயது 62 கும்பகோணத்தில் பிறந்த அவர் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணேஷுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவது  உடல் திருச்சியில் இருந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவர்களது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

நாளை இறுதி சடங்கு நடைபெற இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.