நதியா – குஷ்பூ – பூனம் தில்லான் சந்திப்பு

13

தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நதியா. சிவகுமார், ரஜினிகாந்த், மோகன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் திரையுலகுக்கு வந்தார். மும்பையில் நடிகை குஷ்பு, பிரபல இந்தி நடிகை பூனம் தில்லான் ஆகியோரை நதியா சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது’ என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Leave A Reply

Your email address will not be published.