நடிகை டாப்சியின் சினிமா அனுபவம்

20

 

 

“முதலில் எல்லோருக்கும் எல்லாமே புதிதாகத்தான் இருக்கும். அனுபவம்தான் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும். நான் முதலில் மாடலிங் செய்துக்கொண்டு இருந்தேன். அந்த படங்கள் பகிரப்பட்டன.

அப்போது தெலுங்கில் புதிய கதாநாயகி வாய்ப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டேன். சினிமா பற்றி எனக்கு ஜீரோ ஞானம்தான் இருந்தது. அதோடுதான் இந்த துறைக்கு வந்தேன்.

நடிப்பு, மொழி எதுவுமே தெரியாது. என்ன செய்ய வேண்டும். எதை செய்யக் கூடாது என்றும் தெரியவில்லை. சினிமா பின்னணியும் கிடையாது. சினிமா துறையில் பெரிய சினேகிதர்களும் இல்லை.

எனக்கு திருப்தி அளிக்கும் படங்களை தேர்வு செய்வதா இல்லை பெரிய ஹீரோ படங்களை தேர்வு செய்ய வேண்டுமா என்பதும் தெரியவில்லை. பிங்க் படத்துக்கு பிறகு படங்களை தேர்வு செய்யும் தெளிவு எனக்கு வந்தது.

மொழி தெரிய வேண்டும். தெரியாவிட்டால் இயக்குனர் எதிர்பார்ப்பதை கொடுக்க முடியாது. கதாபாத்திரத்துக்கான தேவையை பொறுத்து என்னை மாற்றிக்கொள்கிறேன். பயிற்சியும் எடுக்கிறேன்.”

இவ்வாறு டாப்சி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.