நடிகை த்ரிஷா நடிக்கும் புதிய படம் ‘ தி ரோடு’ !

1

திரையுலகின் பல ஆண்டுகளாக முன்னணி நடிகை பட்டியலில் இருக்கும் த்ரிஷா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் கலக்கி வருபவர். வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி முத்திரை பதித்துள்ள த்ரிஷா, தற்போது முதன்மை கதாபாத்திரப் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு, கொரோனா காரணமாக நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’. இதனைத் தொடர்ந்து மணிரத்னத்தின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதியப் படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் திரைப்படக்கல்லூரியில் பயின்றவர் குறும் படங்கள் விளம்பரப் படங்கள் மற்றும் வெப் தொடர் ஒன்றையும் இயக்கியுள்ளார். அவர் தற்போது  மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்திற்கு ’தி ரோடு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த உண்மை சம்பவங்கள் நிகழ்ந்த நிஜமான இடங்களுக்கே சென்று படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஒட்டி ஏப்ரல் 25 முதல் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. த்ரிஷா, மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், M.S.பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ‘Dancing Rose’ சபீர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் இரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே கதையில் கருவாக எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. 2000களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவமே இக்கதையின் அடிப்படையாக அமைந்திருக்கிறது என்றார் இயக்குநர் அருண் வசீகரன்.

Leave A Reply

Your email address will not be published.