நடிகை வித்யா பிரதீப் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றார்!.

5

மிழில், ’அவள் பெயர் தமிழரசி’, ’பசங்க 2’, மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ’தடம்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் வித்யா பிரதீப். இவர், தான் ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் டாக்டரேட் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டெம் செல் என்பது ஒரு தாயின் பிரசவ காலத்தில் குழந்தையோடு வெளிவரும் ஒரு தசையாலான கயிறு போன்ற பகுதி. இது பல வ்வியாதிகளை உணமாக்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து வித்யா பிரதீப் கூறும்போது, “கடந்த பத்து வருடங்களாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் தான் நான் பணியாற்றி வந்தேன். அதை எல்லாம் தாண்டி நான் சென்னைக்கு எந்த காரணத்திற்காக வந்தேனோ அது நிறைவேறிவிட்டது. தற்போது விஞ்ஞானியாகவும் ஆகிவிட்டேன். இதற்காக கடின உழைப்பு தீர்மானம் ஆகியவற்றை கொடுத்ததுடன் சில தியாகங்களையும் நான் செய்துள்ளேன்.

இப்படி ஒரு இடத்திற்கு வந்திருப்பதன் மூலம் எனக்கான பொறுப்பு இன்னும் அதிகரித்து இருப்பதாக உணர்கிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறிவியலுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பணியாற்றுவேன். மேலும் என் ஆராய்ச்சிக்கான பணிகளை நான் அமெரிக்காவில் மேற்கொள்ள இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையை சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று ” என கூறியுள்ளார் வித்யா பிரதீப்.

Leave A Reply

Your email address will not be published.