ஆதிசங்கரர் வாழ்க்கை சினிமா படமாகிறது

18

சங்கர மடங்களை நிறுவிய ஆன்மிக ஞானி ஆதிசங்கரர் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை சித்திரைச் செல்வன் இயக்குகிறார்.

திரைப்பட கல்லூரி மாணவரான இவர் ஏற்கனவே ஆக்ரா படத்தை டைரக்டு செய்துள்ளார். சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஒளிப்பதிவும் செய்து இருக்கிறார்.

ஆதிசங்கரர் வாழ்க்கையை படமாக்குவது பற்றி அவர் கூறும்போது, ‘7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாற்றை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் மனதிலும் பதியும் வண்ணம் திரைப்படமாக எடுக்கிறேன்.

இந்த படத்துக்கான வசனத்தை எழுத்தாளர் இந்துமதியை எழுத வைத்து காஞ்சி மடத்தில் ஒப்படைத்து ஒப்புதல் பெற்ற பிறகே படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளேன். புராண காலத்து அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படும்.

முன்னணி நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். காஷ்மீர், வாரணாசி, பூரி, சிருங்கேரி, காஞ்சீபுரம், சிதம்பரம், திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய முக்கிய நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.’ என்றார்

Leave A Reply

Your email address will not be published.