பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மத்திய மாநில அரசுக்கு எதிரான போராட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று நடந்தது. இது குறித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து இன்று தமிழகமெங்கும் மநீம போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டம் தொடரும்.
மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து இன்று தமிழகமெங்கும் மநீம போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டம் தொடரும். pic.twitter.com/hmQCpTk3yg
— Kamal Haasan (@ikamalhaasan) July 10, 2021