ரசிகர்களின் வேண்டுகோளுக்காக அஜீத் பில்லா மீண்டும் ரிலீஸ்..

10

 

அஜித்குமார்  கதாநாயக னாக நடித்த “பில்லா” திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளியாகியது விஷ்ணுவர்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா.

பிரபு,  ரகுமான்,  சந்தானம் ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நமிதா நடித்திருந்தார்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான “பில்லா” முழுக்க முழுக்க மலேசியாவிலே படமாக்கபட்டது
ஆனந்தா பிக்சர் சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் எல்.சுரேஷ் தயாரித்த இந்தத் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றிப்பட மாக அமைந்தது.

வித்தியாசமான ஸ்டைலில் அஜீத் நடித்தி ருந்த “பில்லா” நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 12ஆம் தேதி தமிழக மெங்கும் திரையரங்கு களில் வெளியாகவிருக் கிறது

அஜித்தின் படம் திரையரங்குகளில் வெளி யாகி நீண்ட நாட்கள் ஆகின்றது என்பதால் பில்லா படத்தை உற்சாக மாக வரவேற்க அஜித் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.