வைரலாகும் அஜித்தின் வலிமை பட பைக் சாகச புகைப்படம் 

35

அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை கொரோனாவுக்கு முன்பே முடித்து விட்டனர். ஊரடங்கை தளர்த்தியதும் மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பை தொடங்கினர்.

அஜித்குமார் கொரோனாவுக்கு அஞ்சாமல் துணிச்சலாக படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். சமீபத்தில் வில்லன்களுடன் அஜித்குமார் பைக்கில் சென்று சண்டையிடுவது போன்ற காட்சிகளை எடுத்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பைக் சரிந்து விபத்து ஏற்பட்டு அஜித்குமாருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் அவருக்கு முதல்உதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரம், ஓய்வுக்கு பின் மீண்டும் அந்த காட்சியில் அஜித்குமார் நடித்து கொடுத்துவிட்டு சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் முதல் தடவையாக அஜித்குமார் வலிமை படப்பிடிப்பில் பங்கேற்று நடித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

அதில் அஜித்குமார் பைக்கில் சாகசம் செய்வது போன்ற காட்சி உள்ளது. இந்த காட்சியை படமாக்கியபோதுதான் கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.