மீண்டும் அஜ்மல் ! அதகளப்படுத்தும் “நெற்றிக்கண்” டிரெய்லர்!

2

 

தமிழ் சினிமாவில் அறிமுகமான “அஞ்சாதே” படத்திலேயே, யாரிந்த புதுமுகம் என அனைவ ரையும் ஆச்சர்யப்படுத் தியவர் நடிகர் அஜ்மல். தொடர்ந்து அவர் நடித்த #கோ படத்திலும் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்தது. ஹீரோவாக மாறிய அவர், தனது மருத்துவ மேற்கல்வி பயில்வதற்காக லண்டன் சென்றதால் நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருந்தார். தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ள அவர், நயன்தாரா நடிப்பில் மிகப்பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியி ருக்கும், #நெற்றிக்கண் திரைப்படத்தில் எதிர் நாயகனாக அதகளப்படுத் தியிருக்கிறார். ட்ரெயலரிலேயே அவரது நடிப்பு பெரும் பாராட்டுக் களை குவித்து வருவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

“நெற்றிக்கண்” திரைப்பட அனுபவம் குறித்து அவர் கூறியதாவது…

கோ படத்திற்கு பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தது. ஆனால் இடையில் எனது மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதால் எந்த வாய்ப்பு களையும் என்னால் ஒப்புக்கொள்ள முடிய வில்லை. இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப, #நெற்றிக்கண் மிகச் சிறந்த வாய்பாக அமைந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஆடு புலி ஆட்டம் தான் மொத்தப்படமுமே என்பதால் எனது பாத்திரம் இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ஆங்கில ‘ஜோக்கர்’ பட பாத்திரத்தை ஒத்தது தான் இப்படத்தில் என்னுடைய பாத்திரம். சைக்கோ வில்லனாக இருந்தாலும் தனித்து தெரியும் பாத்திரமாக இருக்கும். ரசிகர்கள் கண்டிப்பாக எனது கதாபாத்திரத்தை ரசிப்பார்கள். நயன்தாரா, கேமராமேன் RD ராஜ சேகர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், இயக்குநர் மிலிந்த் ராவ் என இந்த கூட்டணியே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணி. இந்தப்படம் இதுவரையி லான தமிழ் திரில்லர் களை, மிஞ்சும் படைப்பாக இருக்கும் என்றார்.

தற்போது அஜ்மல் நடிப்பில் “நெற்றிக்கண்” வெளியாக வுள்ள நிலையில் முன்னணி நடிகர்க ளுடனும், நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல நல்ல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இருந்தும் தன் நடிப்புக்கு தீனி போடும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அடுத்தடுத்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
– Johnson
Pro

Leave A Reply

Your email address will not be published.