அகடு (திரைப்பட விமர்சனம்)

53

படம்: அகடு
நடிப்பு: ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக். அஞ்சலி நாயர், ரவீனா
இசை: ஜான் சிவநேசன்
ஒளிப்பதிவு : சாம்ராட்
தயாரிப்பு: விடியல் ராஜ், எஸ்.சுரேஷ்குமார்
இணை தயாரிப்பாளர்: சஞ்சீவ், யுவராஜ் சிங்காரவேலு
இயக்கம்:எஸ்.சுரேஷ்குமார்

அலுவலகத்தில் ஒரு வாரம் விடுமுறை பெற்றுக்கொண்டு நான்கு நண்பர்கள் கொடைக்கானல் வருகின்றனர். வந்த இடத்தில் மற்றொரு டாக்டர் குடும்பம் அவர்களுக்கு பழக்கமாகிறது.அவர்கள் ஒன்றாக சேர்ந்து கொடைக்கானல் சுற்றிப்பார்க்கச் செல்கின்றனர். அப்போது சில போதை ஆசாமிகளுடன் மோதல் ஏற்படுகிறது. பின்னர் டாக்டர் குடும்பமும், நண்பர்களும் விடுதி திரும்புகின்றனர். காலையில் பார்க்கும்போது நண்பர்களில் ஒருவரும், டாக்டரின் மகளும் காணாமல் சென்றிருப்பது தெரிகிறது. எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் தருகிறார் டாக்டர்.போலீஸ் விசாரணையை தொடங்குகிறது.ஒரு கட்டத்தில் காணாமல் போன நண்பர் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அவரை கொன்றது யார், டாக்டரின் மகள் எங்கு போனார் என்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

விஜய் டிவி சித்தார்த் ஹீரோவாக நடித்தி ருக்கிறார். அவரது நண்பர்களாக மேலும் 3 பேர் நடித்திருக்கின்றனர். நிஜ நண்பர்களாகவே மாறி பொழுதை ஜாலியாக கழிப்பது எதார்த்தம்.
டாக்டர் தம்பதியின் மகள் சக நண்பர் களை அங்கிள் என்று அழைத்து அவர்களுடன் சகஜமாக பழகும்போதே அடுத்து ஏதோ வில்லங்கம் நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது.
திடீரென்று அந்த பெண்ணும் சித்தார்த்தும் காணாமல் போய் விட்டார்கள் என்ற தகவல் தெரியும் போதும் லேசான ஷாக் தருகிறார் இயக்குனர்.
காணாமல் போனவர்களை ஜான் விஜய் தலைமையிலான போலீஸ் டீம் தீவிரமாக தேடும்போது சித்தார்த் கொல்லப்பட்ட விவரம் தெரியும்போது அடுத்த ஷாக் தரப்படுகிறது. இப்படி அதிர்சிக்குமேல் அதிர்ச்சியாக சஸ்பென்ஸ் முடிச்சுக்களை போட்டு படத்தை சுவாரஸ்யாமாக்கி இருக்கிறார்கள்.
யார்தான் கொலை குற்றவாளி என்று கடைசிவரை சஸ்பென்ஸ் வைத்து கதையை கொண்டு சென்றிருப்பது ஆரவத்தை கூட்டுகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய் கண்டிப்பான போலீசாகவும், டிடெக்டிவாகவும் செயல்பட்டு கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக் கிறார்.

அகடு என்ற வார்த்தைக்கு பொல்லாங்கு அல்லது தீமை என்று அர்த்தம். அந்த வார்த்தையை திருக்குறளலிருந்து எடுத்ததுடன் அந்த குறளை மைய்யப் படுத்தி சஸ்பென்ஸ் கதையும் அமைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார்.

சாம்ராட் ஒளிப்பதிவு, ஜான் சிவநேசன் இசையும் கைகொடுக் கிறது.

அகடு – சஸ்பென்ஸ் பரபரப்பு.

Leave A Reply

Your email address will not be published.