’மக்களுடன் கூட்டணி, வெற்றிக்கு உழையுங்கள்’ கமல் பேச்சு..

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மேலும் 2 நாள் நீட்டிப்;பு..

15

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் துவங்கியது.

கட்சி தலைவர் கமல்ஹாசன்  முன்னிலையில் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்னும் இரு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெற்ற இந்த கூட்டதில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முதல் அமர்வை கட்சி பொதுச்செயலாளர் (கட்டமைப்பு ) தொகுத்து வழங்கினார். துணைத்தலைவர் வரவேற்புரை வாசிக்க, கட்சி தேர்தலை அணுக வேண்டிய வழிமுறைகள் கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும் மாநில செயலாளர்கள் பேசினார்.

முடிவில் தலைவர்  கமல் ஹாசன் பேசினார். சார்பு அணிகளுக்கான பொறுப்பு முருகானந்தத்திற்கு தலைவரால் வழங்கப்பட்டது. மேலும் ’கூட்டணி என்பது என் வேலை. வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும். நம் கூட்டணி மக்களுடன்; என்று குறிப்பிட்டார். நாளை நமதே!

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.