‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்

17

தமிழ், இந்தி, தெலுங்கில் வெப் தொடர்கள் அதிகம் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, நித்யா மேனன், மீனா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

சூர்யா, விஜய்சேதுபதி, சத்யராஜ், காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். தற்போது அமலாபாலும் வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தெலுங்கில் குடியெடமைதே பெயரில் 8 பகுதிகளை கொண்ட திகில் கதையம்சம் உள்ள தொடராக தயாராகிறது. இதில் அமலாபால் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்த தொடரை பவன்குமார் இயக்குகிறார். ஏற்கனவே தலைவா படத்தில் போலீஸ் அதிகாரியாக அமலாபால் நடித்து இருந்தார்.

இது தவிர நந்தினி ரெட்டி இயக்கும் வெப் தொடரிலும் அமலாபால் நடிக்கிறார். தற்போது சொந்த தயாரிப்பில் உருவாகும் கடாவர் படத்தில் அமலாபால் நடித்து முடித்துள்ளார். அடுத்து இந்தி படமொன்றில் நடிக்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.