சத்யஜோதி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “வீரன்” திரைப்பட பூஜைச் செய்தி!

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sathya Jyothi Films மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா கூட்டணி எப்போதும் வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் வெளியான ‘இது சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு’ திரைப்படங்கள், மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது இந்த கூட்டணி மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

ARK சரவணன் இயக்கும் “வீரன்” படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 25, 2022) காலை பொள்ளாச்சியில் எளிமையான சடங்குகளுடன் இனிதே தொடங்கியது. படக்குழுவினர் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்புவார்கள். இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர், இதில் ஆதிரா ராஜ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

வீரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் தீபக் D மேனன் (ஒளிப்பதிவு), G.K.பிரசன்னா (எடிட்டர்), NK ராகுல் (கலை), மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்ஸ்), ட்யூனி ஜான் (பப்ளிசிட்டி டிசைனர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (பத்திரிகை தொடர்பு), அமீர் (ஸ்டில்ஸ்), மற்றும் கீர்த்தி வாசன் (ஆடை வடிவமைப்பாளர்).

வீரன் படத்தை Sathya Jyothi Films T.G.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

‘Veeran’Hip Hop TamizhaSathya Jyothi Films
Comments (0)
Add Comment