அன்பிற்கினியாள் (பட விமர்சனம்)

14

படம் : அன்பிற்கினியாள்
நடிப்பு : அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவின் ராஜா, கோகுல், ரவீந்திர விஜய், கே. வி.பி தீபக் ராஜ், பூபதி ராஜா, ஜெயராஜ், அடிநாட் சசி, சங்கர் ரத்னம், கவுரி, த்ரியா பாண்டியன், மோனிஷா முரளி, சந்தோஷ், ஜி மணி பாரதி, சுரேஷ்
இசை : ஜாவித் ரியாஸ்
ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி
தயாரிப்பு : அருண் பாண்டியன்
இயக்கம் : கோகுல்

தந்தை அருண்பண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் பாசப்பறவைகளாக உலா வருகின்றனர். சென்னையில் ஒரு ரெஸ்டாரண்ட்டில் வேலை பார்த்தாலும் தந்தை பட்ட கடனை அடைக்க வெளிநாடு சென்று சம்பாதிக்க முடிவு செய்கிறார் கீர்த்தி. முதலில் அதற்கு மறுக்கிறார் தந்தை. இதற்கிடையில் கீர்த்தி ரகசிய காதல் தந்தைக்கு தெரியவர அவர் கோபம் அடைகிறார். உடனே வெளிநாட்டுக்கு கீர்த்தியை அனுப்ப முடிவு செய்கிறார், மறுநாள் வெளிநாடு புறப்படவிருக்கும் கீர்த்தி அன்று இரவு ரெஸ்டாரண்ட்டில் உள்ள ஃப்ரிஸர் அறையில் சிக்கிக்கொள்கிறார். அங்கிருந்து அவர் தப்பிக்க இரவு முழுவதும் நடத்தும் போராட்டமே மீதி கதை.

தந்தை மகளாக நிஜ தந்தை மகள் அருண்பாண்டியன் கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கின்றனர். இருவரும் பாசமும் நேசம் இயற்கையாக அமைந்திருக்கிறது. சிகரெட் பிடிக்க கூடாது என்று அம்மா புகைப்படத்தை காட்டி அதன் மீது சத்தியம் கேட்கும் கீர்த்திக்கு சத்தியம் செய்துகொடுத்துவிட்டு மறைத்து வைத்திருக்கும் சிகரெட்களை எடுத்து காட்டி இவ்வளவு சிகரெட்டா என்று அப்பாடி போட வைக்கிறார் அருண்.

காதலனுடன் சுற்றும் கீர்த்தி போலீசில் சிக்கியவுடன் அப்பாவுக்கு தெரிந்துவிடுமே என்று பயப்படுவதும் அப்பாவுக்கு தெரிந்தபின் அவரிடம் பேச முடியாமல் தர்மசங்கடத்தில் தயக்கம் காட்டுவதுமாக கீர்த்தியின் நடிப்பில் இயல்பு நிரம்பி வழிகிறது.

ஃப்ரீஸர் அறைக்குள் சிக்கிக்கொண்ட பிறகு கீர்த்தியின் நடிப்பு சோலோ பர்பாமன்ஸ் ஆகிவிடுகிறது. தனி ஒரு ஆளாக அங்கிருந்து தப்பிக்க அவர் நடத்தும் போராட்டம் கடினமான காட்சிகள். தன்னுடைய கஷ்ட நேரத்திலும் எலிக்கு உணவு கொடுத்து கதாப்பாத்திரத்தின் பெயரை தக்க வைக்கிறார்.

அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார். கோகுல் கொடுத்த தைரியம் கீர்த்தியின் துணிச்சலான நடிப்பில் வெளிப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவு, இசை பலம் சேர்க்கிறது.

கோகுல் இயக்கத்தில் அற்புத படைப்பான அன்பிற்கினியாள் ஒரு பெண்ணின் வாழ்வா சாவா போராட்டம். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

Leave A Reply

Your email address will not be published.