நடிகைகள் பாடிய திருப்பாவை பாசுரம்

20

 

தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சி இந்த திருப்பாவையின் முதல் பாசுரம். போன வருடம் ரவி வர்மாவின் ஓவியங்களை நம் தென் னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கி யதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகர்கள் எங்கள் சொந்தக் குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம்.

பாடியவர்கள் உமா பத்மனாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன் , அனு ஹாசன் , கனிஹா, ஜெயஶ்ரீ, சுஹாஸினி ….

ஷோபனாவின் அபிநயம் பாடலுக்கு மணிமகுடம் .

இந்த பாடலை பெரும்பாலோர் எங்கள் தொலைபேசியிலேயே பாடி பதிவு செய்தோம். இவற்றை அற்புதமாக அமைத்து தொகுத்தவர் சுபஶ்ரீ தணிகாசலம்

ஒளிப்பதிவு பகத் மற்றும் பாடகிகளும் தங்கள் தொலைபேசியிலேயே ஒளிப்பதிவு செய்தனர்

தொகுப்பு கெவின் தாஸ் …கத்தார் நாட்டிலிருந்து தொலை தொடர்பு
நிர்வாகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பாடல் இந்த வருடம் மட்டுமல்லாமல் அடுத்த வருடமும் மார்கழி மாதம் ஒரு பாசுரத்துடன் உங்களை மகிழ்விப்பது எங்கள் நோக்கம் என்கிறார்
சுஹாஸசினி மணிரத்னம்.

Andal’s thiruppaavai sung by actor

Leave A Reply

Your email address will not be published.