இயக்குனர் கே.பாலசந்தர் நினைவு நாளில் முதியோர் இல்லத்தில் அன்னதானம்

15

“இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 6-ஆம் ஆண்டு நினைவு
அஞ்சலியும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்,2-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும், கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி, மருமகன் கந்தசாமி பரதன், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளின் அழைப்பிற்கினங்க  “தமிழ்நாடு காங்கிரஸ்-மனித உரிமை துறையின் தலைவர் மஹாத்மா ஸ்ரீ னிவாசன்  “அக்சையா முதியோர் இல்லத்தில்(சென்னை), முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் நடிகர் ரமேஷ்கண்ணா, எழுத்தாளர் தாசரதி, பூவிலங்கு மோகன் , நடிகையும்,நடன இயக்குனரும்,பாரதீய ஜனதா கட்சி, “தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார துறையின் தலைவியுமான, ஆர்.காயத்ரி ரகுராம்,திரைப்பட பாடகி  சின்மயி ஸ்ரீபாதா, *கராத்தே மாஸ்டர், நடிகர்,ஷீஹான் ஹீசைனி மற்றும் திரையுலகை சார்ந்தவர்களும்,கே.பி.ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

அரிமா,கார்த்திக் சீனிவாசன் வர்மா “புது ராயல் அசோக்குமார் லைன்ஸ் கிளப் சார்பாக100-பூச் செடிகளை நுங்கம் பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்திற்கும், மேலும்,”சாய் எலக்ட்ரோ பயோஜெனிக் இந்தியா, PVT,LTD சார்பாக 100-நபர்களுக்கு கோவிட் நோய் தடுப்பு மருந்தும்,முக கவசமும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.

இவ் விழாவினை கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க தலைவர் ராஜேஷ், பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ்-மனித உரிமை துறையின்,கலை பிரிவு மாநில பொதுச் செயலாளரும்,ஒளிப்பதிவாளருமான, “கவிதாலயா வீ.பாபுவும், இணைச் செயலாளர்கள் கவிதாலயா பி.பழனிசாமி, ஒளிப்பதிவாளர் ஏ.கண்ணப்பன், எடிட்டர் எஸ்.ராமமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.