அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைப்பு

14

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்புகளுக்கு மீண்டும் அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 14 ம் தேதி முதல் ஐதராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பூ உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் படக்குழுவில் உள்ள 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘வழக்கமா எடுக்கப்படும் பரிசோதனையில் படக்குழுவில் இருந்து 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் மற்றவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.  பாதுகாப்பு காரணங்களுக்காக அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.