சிவாஜி குடும்பத்திலிருந்து மற்றொரு திரை வாரிசு

13

சிவாஜி கணேசனின் பேரன் தற்போது முன்னணி இயக்குநரின் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்து, உலகம் முழுவதிலும் பிரபலமானவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி குடும்பத்திலிருந்து ராம் குமார், பிரபு, துஷ்யந்த், விக்ரம் பிரபு என பலர் திரைத்துறையில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். தற்போது ராம்குமாரின் இரண்டாவது மகனும், துஷ்யந்தின் தம்பியுமான தர்ஷனும் நடிக்க வருகிறார். விரைவில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என தர்ஷன் கூறியுள்ளார்.

இவர் வெற்றிபெற Film News சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.