ஆன்டிஇண்டியன் (திரைப்பட விமர்சனம்)

2

படம்: ஆன்டிஇண்டியன்

நடிப்பு: ப்ளுசட்டை மாறன், டத்தோ ராதாரவி, நரேன், ”வழக்கு எண்” முத்துராமன், பாலா, துரை சுதாகர், ஜெயராஜ், சார்லஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, பசி சத்யா,

இசை: ப்ளு சட்டை மாறன்

ஒளிப்பதிவு: கதிரவன்

தயாரிப்பு: மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா

இயக்கம்: ப்ளு சட்டை மாறன்

மீனவ குப்பத்தில் தாயுடன் வசிக்கும் சுவர் ஓவியர் பாஷாவை யாரோ படுகொலை செய்கின் றனர். பிரேத பரிசோத னைக்கு பிறகு பிணத்தை உரியவர்களிடம் ஒப்படைக் கின்றனர். பிணத்தை புதைப்பதில் மத சிக்கல் எழுகிறது. இறந்தவர் பெயர் பாஷா, அவரது தந்தை பெயர் இப்ராகிம், தாயார் பெயர் சரோஜா என்கிற லூர்துமேரி. இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்து என 3 மதமும் இதில் சம்பந்தப்பட்டி ருக்கிறது. உடலை மசூதியில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றால் ’இவர் முஸ்லிம் இல்லை அவரது தாயார் இந்து, முறைப்படி இவர்கள் இஸ்லாம் மதத்துக்கு வரவில்லை’ என்று சொல்லி பிணத்தை புதைக்க அனுமதி தரமறுக்கின்றனர். அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த சில இந்து கட்சியினர் இந்து மயானத்தில் பாஷா உடலை அடக்கம் செய்ய செல்கின் றனர். ஆனால் இறந்தவர் முஸ்லிம் என்பதால் இந்து மயானத்தில் புதைக்க சட்டப்படி அனுமதி கிடை யாது என்று சொல்லிவிடு கின்றனர். இதற்கிடையில் கிறிஸ்தவ அமைப்பினர் எங்களுக்கு அந்த பார்மாலிட்டி எல்லாம் கிடையாது நாங்கள் பாஷா உடலை அடக்கம் செய்கிறோம் என்று சொல்கின்றனர். இதற்கிடையில் திடீரென்று ’பாஷா உடலை நாங்களே அடக்கம் செய்கிறோம் எங்களிடம் உடலை தாருங்கள்’ என்று இஸ்லாம் மதத்தினர் போலீஸில் புகார் தருகின் றனர். இதுபெரிய சர்ச்சை யாக வெடிக்கிறது. இதில் சில அரசியல்வாதிகள் குளிர்காய்கின்றனர். இறுதியில் பாஷா உடலை யார் புதைக்கி றார்கள் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

யூடியூபில் விமர்சனம் என்ற பெயரில் பல படங்களை கிழித்து தோரணமாக தொங்க விட்டவர் ப்ளுசட்டை மாறன் . அவரது எழுத்து இயக்கம். இசை நடிப்பில் உருவாகி இருக்கிறது ஆன்டிஇண்டியன்.
ஒட்டு மொத்த திரையு லகமே இந்த படத்துக்காக காத்திருந்தது. படத்தில் முழுக்க மதத்தை பற்றி பேசப்பட்டிருக்கிறது.
மதத்தை சாக்காக வைத்துக் கொண்டு பலர் செய்யும் அரசியலை இப்போது சினிமாவாக எடுத்து அடித்து, துவைத்து காயப்போட்டிருக்கிறார் மாறன்.

மாறன் நடிப்பு எப்படி என்று யாரும் கிண்டல் செய்து விட முடியாதபடி பிணமாக அவர் நடித்திருப்பது பலருக்கு ஷாக் தரும்.

பாஷா உடலை மசூதியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும்போது மசூதியில் உள்ளவர்கள் ”பாஷா முறைப்படி மதம் மாறியவர் இல்லை. அவரை முஸ்லி மாக ஏற்க முடியாது” என்று அடக்கம் செய்ய மறுக்கும் போது மத பிரச்னை தொடங்கிவிடுகிறது.

”இந்து மயானத்தில் அடக்கம் செய்ய நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று இந்து அமைப்பினர் பாஷா உடலை கொண்டு செல்ல அங்கும், ”அவர் இந்து அல்ல, சட்டப்படி அவரது உடலை புதைக்க முடியாது” என்று திருப்பி அனுப்பியதும் என்னதான் ஆகும் இந்த உடல் என்று அரங்கில் சலசலப்பு எழுகிறது.”நாங்கள் பாஷா உடலை அடக்கம் செய்ய தயார்” என்று கிறிஸ்தவ அமைப்பினர் சொல்லும் போது அரங்கில் மீண்டும் ஒரு சலசலப்பு. இப்படி மதவாதிகள் தங்களுக்கு பிடித்த மதத்தை பிடித்து மதவாதிகள் தொங்கிக் கொண்டிருக்க அரசியல் வாதிகள் இதில் அரசியல் செய்யும் சூழ்ச்சி காட்சிக ளை பரபரப் பாக்குகிறது.
தாசில்தார் தலைமையில் மும்மதத்தினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அது தீர்வு எட்டாத நிலையில் தாசில்தாரை அனுப்பிவிட்டு போலீஸ் அதிகாரி நரேன் போலீஸ் லட்டியையும், துப்பாக்கி யையும் காட்டி மிரட்டி அவர்களை பணிய வைப்பது அமர்க்களம்.
ஒரு கலவரம் எப்படி சில அரசியல் வாதிகளால் தூண்டப்படுகிறது என்பதை அப்பட்டமாக இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

டத்தோ ராதாரவி முதல்வர் கதாபாத் திரத்தில் தோன்றி தேர்தலில் ஜெயிக்க போலீஸ் அதிகாரிகளை பகடைக் காயாக  பயன்படுத்து வதும், பின்னர் அரசியல் சூழ்ச்சியால் மதக் கலவரம் வெடிப்பதும் எதிர்ப்பாராத காட்சிகள்.

வில்லங்கமான கதை என்றாலும் எந்த வில்லங்கத்துக்கும் இடம் தராமல் சட்ட விதிப்படி கிளைமாக்ஸை அமைத்து கதைக்கு கடிவாளம் போட்டிருக்கிறார் ப்ளு சட்டை மாறன். இவரின் பின்னணி இசையும் சோடையில்லை.
கானா பாட்டு, ஒரிஜனலாக கானா பாடும் இளைஞர் களால் ஒரிஜினால்ட்டி குறையாமல் ஒலிக்கிறது.

கதிரவன் தேவையான ஒளிப் பதிவை கச்சிதமாக செய்திருக் கிறார்.

ஆன்டிஇண்டியன் – மதவாதிகளையும் அரசியல்வாதிகளையும் தோலுரிக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.