பிரசாந்த் ஜோடியாக சிம்ரன் மீண்டும் இணைகிறார்..

அந்தாதுன் ரீமேக்கில் ஜோடிபோடுகிறார்கள்..

22

நடிகர் பிரசாந்த், நடிகை சிம்ரன், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி உள்ளிட்ட 5 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் இணைகிறது.

இந்தியில் வெற்றி பெற்ற படம் அந்தாதுன். தேசிய விருது வென்றதுடன் வசூலிலும் சக்கை போடுபோட்டது. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். சிம்ரன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ஜேஜே. ப்ரட்ரிக் இயக்குகிறார். இவர் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கியவர்.

இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.