அனிமேஷன் படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

17

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தீனா, ரமணா, கஜினி, 7-ம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி டைரக்டராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார்.

அடுத்து விஜய்யின் 65-வது படத்தை அவர் இயக்குவதாக இருந்தது. படப்பிடிப்பை தொடங்கும் நிலையிலும் இருந்தனர். ஆனால் திடீரென்று அந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலகி விட்டார்.

கொரோனாவால் தயாரிப்பு செலவுகளை குறைக்க தயாரிப்பாளர் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முருகதாஸ் சம்பளத்தையும் குறைத்துக்கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும், அதற்கு முருகதாஸ் உடன்படாமல் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் தகவல் பரவி உள்ளது.

விஜய்க்கு கதை பிடிக்கவில்லை என்பதே விலகலுக்கு காரணம் என்று இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அடுத்து அனிமேஷன் படத்தை இயக்க முருகதாஸ் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இது நடந்தால் ஹாலிவுட்டுக்கு செல்லும் தமிழ் இயக்குனர் என்ற பெருமை முருகதாசுக்கு கிடைக்கும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.