ஜேம்ஸ் பாண்டுக்கு இந்திய திரையுலகம் சார்பில் குட்பை

ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

12

உலக அளவில் ரசிகர்களை கொண்டவர் பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் சீன் கானெரி நேற்று (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 90.

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகர் சீன் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தந்து 90வது பிறந்த தினம் கொண்டாடினார்.

சீன் கானெரியின் தீவிர ரசிகர் இசை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் சீன் கெனரி மறைவுக்கு  இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ’இந்திய திரையுலகம் சார்பில் சீன் கெனரிக்கு குட்பை சொல்கிறோம். இத்தனை நீண்ட வருடங்களாக எங்கள் உணர்வோடு கலந்திருந்தவர் ஜேம்ஸ்பாண்ட் சீன் கெனரி. அவருக்கு எங்கள் நன்றி’ என உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Leave A Reply

Your email address will not be published.