ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் காலமானார்

திரையுலகினர் இரங்கல்..

15

ஆஸ்கர் நாயகன், இசை அமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான்  தாயார் கரீனா பேகம். இவர் இன்று காலாமார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறும்போது.’ என்றைக்கும் எங்கள் மகராணி அவர்தான்’ என கரீனா பேகம் படம் வெளியிட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில்,’
ஆஸ்கார் வென்று பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் திருமதி கரீமா பேகம் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இசை அமைப்பாளர்கள் தேவி ஸ்ரீபிரசாத், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், இயக்குனர்கள் சேரன், அஜய் ஞானமுத்து, பாடகி ஸ்ரேயா கோஷல் என திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின் றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.