ஏ.ஆர்.ரகுமானின் புதிய இசை நிறுவனம்

7

அடுத்த தலைமுறை இசை கலைஞர்களுக்காக புதிதாக ‘மாஜ்ஜா’ என்ற பெயரில் இசை நிறுவனத்தை ஏ.ஆர்.ரகுமான் துவங்கியுள்ளார். சென்னையில் விரைவில் ‘யாழ்’ என்ற இசை திருவிழாவையும் அவர் நடத்த உள்ளார். கிராமி மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், புதிய முயற்சியாக தொழில்நுட்பம் சார்ந்து மாஜ்ஜா என்ற புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். அடுத்த தலைமுறை, இசைக் கலைஞர்களின் திறன்மிகு படைப்புகளை, உலக அளவில் கொண்டு செல்வதை குறிக்கோளாக கொண்டு இதை ஆரம்பித்துள்ளார்.அத்துடன், யாழ் இசை திருவிழாவாயிலாக இளம் திறமையாளர்களையும் வெளிப்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து ஏ ஆர் ரகுமான் கூறியதாவது :

மாஜ்ஜா நிறுவனம் சுயாதீன இசை முயற்சிகளுக்கான மேடையாக இருக்கும். படைப்புச் சுதந்திரத்தின் முழுமையை அளிப்பதுடன், திறமையாளர்களை உலக அளவில் எடுத்துச் செல்வதே இதன் குறிக்கோள். திறமையாளர்கள் பலர் உள்ளனர். அவர்கள் எந்த ஒரு அடையாளமும் வெளிபடாமலேயே காணாமல் போய் விடுகின்றனர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், திறமையானவர்களுக்கான தடைகள் உடைக்கப்படும். தொழில் நுட்பத்தால் இசைக்கலைஞர்களுக்கு புது யுகம் படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.