பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை நடிகராக அறிமுகமாகும் புதிய படம் ‘அரபி’ டீசர்1

1

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். 32 வயதான கே.எஸ். விஸ்வாஸ் இரு கைகளை இழந்த நிலையிலும், பாரா நீச்சல் போட்டியில் ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார். இவருடைய சிறு வயதில் ஏற்பட்ட மின்சார விபத்தில் இரு கைகளை இழந்துள்ளார். பின்னர் பி.காம் பட்டப்படிப்பு முடித்தநிலையில், குங் பூ, நடனம், நீச்சல் உள்ளிட்ட கலைகளை கற்றுள்ளார். மேலும் சர்வதேச பாரா நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல சாதனைகள் புரிந்து வருகிறார் விஸ்வாஸ்.

தற்போது இவரின் வாழ்க்கை ‘அரபி’ (‘Arabbie’) என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. கன்னட இயக்குனர் ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் தான் அண்ணாமலை, நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்தக் கதை பிடித்ததால் சம்பளமே பெறாமல் அண்ணாமலை இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பே வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது வெளியாகவில்லை. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

படத்தில் அண்ணாமலை முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தெரிகிறது. சிங்கம் அண்ணாமலை ஐபிஎஸ், முதன்முறையாக திரையில் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.