கிரைம் திரில்லரில் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ்

1

ஜி. கே ரெட்டி & லோகு ஆகியோர் ஜி. எஸ். ஆர்ட்ஸ் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், “Production No.2” க்ரைம் திரில்லர் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்

ஜி. எஸ். ஆர்ட்ஸ்  சார்பில் ஜி அருள் குமார் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்தில், நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர், நடிகர் GK ரெட்டி மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் இணைந் துள்ளனர். தயாரிப்பாளர், நடிகர் GK ரெட்டி இப்படத்தில் நடிகர் அர்ஜூனின் தந்தையாக நடிக்கிறார். இப்படம் க்ரைம், திரில்லர் விசாரணை வகையை சேர்ந்த படமென்றாலும், படத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக அப்பா மகன் உறவு ஆழமாக சொல்லப்பட்டி ருக்கிறது. அந்த வகையில் இப்படத்தில் அர்ஜூன் மற்றும் GK ரெட்டி இருவரது பாத்திரங்களும் சிறப்பாக இருக்குமென்று படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் கதிர் தந்தை லோகு, படத்தில் கதையின் திருப்புமுனைக்கு உதவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இரு பாத்திரங்களும் படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், இப்பாத்திரங்களை சிறப்பாக கையாளும் சிறந்த நடிகர்களை தேர்வு செய்ய வேண்டுமென படக்குழு முடிவு செய்திருந்தது. பல கட்ட தேர்வுகளுக்கு பிறகே, GK ரெட்டி & லோகு ஆகியோரை இப்பாத்திரங் களுக்காக படக்குழு தேர்வு செய்துள்ளனர்.

 

ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் அனைத்து நடிகர்களும் பங்குகொள் ளக்கூடிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க வுள்ளது. ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டி கேஷன் கதை, இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தை களின் பின்னணியில் அமைந்துள்ளது.

இப்படத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதி வாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), விக்கி (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு )பணிகளை செய்துள்ளனர். GK ரெட்டி, லோகு பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.