சினிமா ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

2

பிரபல கலை இயக்குனர்
அங்கமுத்து சண்முகம் காலமானார்.

இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்து சண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள் படங்களிலும் கலைஇயக்குனராக பணிபுரிந்தவர் இவர்.

கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரா கவும் தொடர்ந்து மூன்று முறை தேர்வாகி பணிபுரிந்து வந்தார்.

புற்றுநோயின் பாதிப்பில் இருந்த அவர் இன்று (27.06.2021) காலமானார். அவரது உடல்
எண் : 32/52
குமரப்ப முதலி தெரு
துங்கம்பாக்கம்
சென்னை 600034-ல் உள்ள
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை (28.06.2021)
அவரது உடல் 12 மணியளவில நல்லடக்கம் செய்யப்படும்
என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்பு எண் :-
வெங்கட் 9382876019

அங்கமுத்து சண்முகம் மறைவுக்கு தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.