அஷ்ட கர்மா (திரைப்பட விமர்சனம்)

60

படம்: அஷ்டகர்மா

நடிப்பு: சி.எஸ். கிஷன், நந்தினி ராய், ஷ்ரதா,

இசை: எல்.வி.முத்துகணேஷ்

ஒளிப்பதிவு: ஆர்.பி.குருதேவ்

தயாரிப்பு: சி.எஸ்.பதம் சந்த், சி.அரிஹந்த் ராஜ், சி.எஸ்.கிஷன்

இயக்கம்: விஜய் தமிழ் செல்வன்

சைக்கட்டிரிஸ்ட் டாக்டர் கிஷனுக்கு பேய், ஆவிகள் மீது நம்பிக்கை கிடையாது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் தனக்கு நடக்கும் பிரச்னைகள் பற்றி கூற அவரை இப்னாடிஸம் செய்து சிகிச்சை அளிக்கிறார். ஆனால் அந்த பெண் சிகிச்சையில் திருப்தி அடையாமல் வெளியேறுகிறார். டிவி விவாத மேடையில் பங்கேற்கும் கிஷன் எதிர் தரப்பில் உள்ள மந்திரவாதிகள் சொல்லும் பேய் கதைகளை நம்ப மறுக்கிறார். அவரை ஒரு பங்களாவில் இருக்க முடியுமா என்று ஒரு மந்திரவாதி சவால்விட அந்த பங்களாவில் தங்குவதாக கூறி சவாலை ஏற்கிறார். அந்த பங்களா தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு சொந்தமானது. அவரோ தங்குவதற்கு அனுமதி மறுக்கிறார். பின்னர்தான் அந்த பங்களாவில் உள்ள குடும்பத்துக்கு யாரோ செய்வினை செய்த விவகாரம் கிஷனுக்கு தெரியவருகிறது. அதிலிருந்து குறிப்பிட்ட குடும்பத்தை காப்பாற்ற கிஷன் முயற்சி எடுக்கிறார். அதன் முடிவு என்ன என்பதை படம் விளக்குகிறது.

புதுமுக ஹீரோவாக  அறிமுகமாகி இருக்கும் சி.எஸ்.கிஷன் படத்தையும் தயரித்திருக்கிறார். ஹீரோ என்பதால் தானே சீனுக்கு சீன் வராமல் மற்றவர்களுக்கும் நடிக்க நிறைய இடம் தந்திருக்கிறார்.

செய்வினை பற்றி அறிய  மந்திரவாதியிடம் கிஷன் கேட்கும் கேள்விகள் இன்றைக்கும் கிராமத்து பக்கம் பேசி வரும் விஷயங்கள் என்பதால் அதற்கான பதிலை அறிய ஆவலை தூண்டி விடுகிறார்.

தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு யார் செய்வினை வைத்தது என்பதை கிஷன் தனது இப்னாட்டிசம் முறையில் கண்டுபிடிப்பதும் அதை தக்க நேரத்தில் எடுத்துச் சொல்லி செய்வினையை அதை வைத்தவர்களுக்கே திருப்பிவிடுவதற்கு செய்யும் வேலைகளில் விறுவிறுப்பு உண்டு.

நந்தினிராய், ஷ்ரதா கதாநாயாகளாக நடித்திருக்கின்றனர். மந்திரவாதிகளுக்கான செய்வினை செய்யும் இடத்தை அமைத்திருப்பது பார்ப்பதற்கே திகிலை ஏற்படுத்துகிறது.

மிஸ்ரி எண்டர்டபிரைசஸ் சார்பில் சி.எஸ்.பதம் சந்த், சி.அரிஹந்த் ராஜ், சி.எஸ்.கிஷன் தயாரித்திருக்கின்றனர். புது இயக்குனர் விஜய் தமிழ் செல்வன் திகில் கலந்து சுவராஸ்யமாக படத்தை இயக்கி உள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவும், எல்.வி.முத்துகணேஷ் இசையும் படத்துக்கு  துணை நிற்கிறது.

அஷ்டகர்மா – பேய் பட பிரியர்களுக்கு பிடிக்கும்

 

 

Leave A Reply

Your email address will not be published.