நடிகை வரலட்சுமி சரத்குமார் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக்கர்களால் முடக்கம்..

10

சமூக வலை தள பக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக்க  இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தற்போது அவரது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது,’என்னுடைய சமூக வலை தள கணக்குகள் இன்ஸ்டாகிராம். டிவிட்டரை யாரோ ஹேக்கர்கள் நேற்று இரவு முதல் முடக்கி இருக்கி றார்கள். என்னால் அதை பயன் படுத்தமுடியவில்லை. இதுதொடர்பாக குழுவுடன் இணைந்து அதை மீட்கும் முயற்சி நடக்கிறது. விரைவில் மீட்கப்படும் அல்லது ஒரு சில நாட்கள் ஆகலாம். என்னு டைய கணக்குகள் மீட்கப் பட்டதும் அதுபற்றி நான் தெரிவிக்கிறேன். அதுவரை என் இணைய தள பக்கத்திலிருந்து யாராவது தகவல்கள் வெளியிடக்கூடும் அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.