பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது..

10

தமிழ், தெலுங்கு. இந்தி உள்ளிட்ட பல மொழிகளில்
40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவருக்கு நாட்டின் மிக உயரிய விருது களில் ஒன்றான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த விருதுக்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 7 பேர் கொண்ட பெயர் பட்டிய லை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.


பொது விவகார துறைக்காக ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கலை பிரிவில் தமிழகத்தில் இருந்து பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மருத்துவ பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த பெல்லி மொனப்பா ஹெக்டே, அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த மறைந்த நரீந்தர் சிங் கப்பானி வழங்கப்படுகிறது. டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுதீன் கான் ஆன்மிகத்திற்காகவும் டெல்லியை சேர்ந்த பி.பி. லால் தொல்லியல் துறைக்காகவும் மற்றும் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் சாஹூக்கு கலை பிரிவிலும் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
Padmavibhusan Award to Singer SP.Balasumramaniyan

Leave A Reply

Your email address will not be published.