எஸ்.பி.பாலசுப்ரமணியதுக்கு பத்ம விபூஷன் விருது

பாடகி சித்ராவுக்கு பத்மபூஷன் விருது

1

சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர் களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்மவிபூ‌ஷன், பத்மபூ‌ஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டுக் கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டன. மொத்தம் 119 பேர் விருதுக்குரியவர் களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப் பட்டு இருந்தது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 29 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர்.

மறைந்த சாதனையா ளர்கள் 16 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப் பட்டு இருந்தன. பத்மவிருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.
இந்த நிகழ்வில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ர மணித்திற்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி. சரண் பெற்றுக் கொண் டார்.

பின்னணி பாடகி சித்ராவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது

விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.