இயக்குனர் பாக்யராஜ் தன் பிறந்த நாளில் சமூக வலைத்தளத்தில் இனைதிருப்பதோடு, ‘கே.பி.ஆர்சோஸ்’ என்ற பெயரில் ‘யு டியூப்’ சேனல் துவங்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “பெரிய திரை, சின்னத்திரை எல்லாவற்றையும் கடந்து இப்போது மிகச் சின்ன திரைக்கு வந்திருக்கிறேன்.
‘யு டியூப்’பில் பேசுவதற்கு என்னிடம் நிறைய விஷயங்கள் இருந்தாலும் இப்போது 10-12 நிமிடத்திற்குள் வீடியோவை முடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். எல்லா காலத்திலும் என்னை ஆதரித்த ரசிகர்கள், இதிலும் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன் என்கிறார் பாக்யராஜ்.