30 வருடங்களாக படுக்கையில் இருக்கும் தன் பட கதாநாயகனை சந்தித்த பாரதிராஜா!

18

30 வருடங்களாக படுக்கையில் இருக்கும் தன் பட கதாநாயகனை சந்தித்த பாரதிராஜா!

பாரதிராஜா இயக்கத்தில் என் உயிர் தோழன் படத்தில் நடித்த பாபுவை மருத்துவமனையில் சென்று சந்தித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

பாரதிராஜா 1990 ஆம் ஆண்டு எடுத்த திரைப்படம் என் உயிர் தோழன். அந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பாபு. இவர் பாரதிராஜாவின் உதவி இயக்குனராவார். மேலும் அந்த படத்துக்கு வசனங்களை எழுதியவரும் அவர்தான். அந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து பாபு அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்றார். அப்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் நடித்த போது கீழே விழுந்து அவரின் முதுகுத்தண்டில் அடிபட்டது.

அதில் இருந்து அவரால் நடக்க முடியாமல் போனது. இதையடுத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை கழித்துவரும் அவரை சமீபத்தில் அவரின் இயக்குனர் பாரதிராஜா சென்று மருத்துவமனையில் பார்த்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காண்பவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.?

Leave A Reply

Your email address will not be published.