இசைஞானி இளையராஜாவின் புதிய இசை கூடம் திறப்பு

பாரதிராஜா, வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி வாழ்த்து

23

1976ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி தமிழ் திரையுலகுக்கு இசையால் ஒரு விடிவெள்ளியாக அன்னக்கிளி படத்தில் தோன்றி உலக அளவில் இசை உள்ளங்களை தனது இசையால் கட்டிப்போட்டு அவர்களின் மனதில் மன்னாதி மன்னனாக வீற்றிருப்பவர் இசைஞானி இளையராஜா.

இளையராஜா சொந்தமாக இசை ஒலிப்பதிவு கூடம் கட்டி  உள்ளார். அங்கு இன்று இசை பணியை தொடங்கினார், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் உருவாகிறது. இப்படத்துக்கு இளைய ராஜா இசை அமைக்க பாடல் பதிவை இன்று புது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தொடங்கினார். இதில் சூரி ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடிக்கிறார்.

போலீஸ் வேடத்தில் சூரி நடிக்க விஜய்சேதுபதி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு இளையாஜா முதன் முறையாக இசை அமைக்கிறார்.

இளையராஜாவின் புதிய ரெக்கார்டிங் ஸ்டுயோவுக்கு நேரில் வந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா தானும் இளையராஜாவும் இருப்பதுபோன்ற ஒரு பிரமாண்ட ஒவியத்தை இளையராஜாவுக்கு பரிசளித்து வாழ்த்தினார். மேலும் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இயக்குனர் வெற்றி மாறன், மகள் பவதாரணி, கணவர் சபரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.