பூமி (பட விமர்சனம்)

29

:
படம்: பூமி
நடிப்பு: ஜெயம் ரவி, நிதி அகர்வால், ராதாரவி, ரோஹித் ராய், தம்பி ராமையா, சரண்யா, சதிஷ், ஜான் விஜய்,ஜி மாரிமுத்து,
தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: டுட்லே
இயக்கம்: லக்‌ஷ்மன்
ரிலீஸ்; டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்
செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தேர்வாகி அதற்கான பயிற்சி யில் இருக்கும் நாசா விஞ்ஞானி ஜெயம் ரவி விடுமுறையில் திருநெல் வேலையில் உள்ள கிராமத் துக்கு வருகிறார். விவசாயி தம்பி ராமையா தனது வயலில் பயிர்கள் கருகியதால் இழப்பீடு கேட்டு போராடு கிறார். அவரையும் போராடிய மற்ற விவசாயி களையும் போலீஸ் அடித்து விரட்டு கிறது. அதை பார்க்கும் ஜெயம் ரவி. போலீஸை தடுத்து தம்பி ரமையாவை மீட்கிறார். கடன்காரர்கள் மிரட்டலால் கலெக்டர் அலுவலம் முன் தீக்குளிக் கிறார் தம்பி ராமையாவை ரவி காப்பாற்ற முயல்கிறார். ஆனாலும் முடியவில்லை. இந்த கொடுமையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற நாசா வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிராமத்தில் தங்கி இயற்கை விவசாயம் செய்கிறார். அதில் லாபம் ஈட்ட முடியும் என்று நிரூபிக்கும் அவரை கார்ப்ப ரேட் அதிபர் ரவியை அழிக்கப் பார்க்கிறார். பின்னர் இது இவர்கள் இருவருக்கும் இடை யேயான மோதலாகிறது. இதில் ரவியால் வெற்றி பெற முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல் கிறது.


நாசா விஞ்ஞானி ஜெயம் ரவி விவசாயியாக மாறியதும் வேடத்தில் வேகம் காட்டு கிறார். தீ வைத்துக் கொண்ட தம்பி ராமையாவை காப்பாற்ற ஒடிவரும் ரவி அவரை காப் பாற்றபோராடுவதும், அது முடியாமல் அவர் இறந்ததும் உருகுவதும் மனதை நெருடு கிறது.
வீரிய நாட்டு விதைகளை தேடிச் செல்லும் ரவி அதை வாங்கி வந்து பயிரிட்டு விவசாயத்தில் லாபம் பார்க்க முடியும் என்று காட்டுவது, ஐடி கம்பெனி வேலையை இழந்துவிட்டு வரும் இளை ஞர்கள விவசாயத்தில் இணைத்து அவர்களுக்கு வேலை தருவதும் புது சிந்தனை.
இயற்கை முறையில் விவசாயத்தை வலியுறுத்தும் அதை செயல்முறையில் செய்துகாட்டுவது காட்சிக்கு வலு சேர்க்கிறது.
மாடு சாணம். கோமியம் பொன்றவற்றை பதப்படுத்தி இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்துவதும் பழைய விவசாய முறையின் நன்மையை வலியுறுத்துவது சபாஷ் பெறுகிறது.
ஜெயம் ரவிக்கும் கார்ப்பரேட் கம்பெனி அதிபருக்கும் நடக்கும் மோதல் காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது. கார்ப் பரேட் முதலாளியாக ரோஹித் ராய் நடித்திருக்கிறார். சைலன்ட்டாக வில்லத்தனம் செய்தாலும் வயலண்ட் ஆக செய்கிறார். இருவருக்கும் கோர்ட்டில் நடக்கும் மோத லும் விறு விறு. ’நீ பூமிய 40 ஆயிரம் உயரத்திலிருந்தான் பார்த்திருப்பே, நான் 7 லட்சம் கோடி கிமீ தொலைவிலிருந்து பார்த்திருக்கிறேன் என ஒரு பஞ்ச் வசனமும் பேசி அசத்துகிறார் ரவி.
ஹீரோயின் நிதி அகர்வால் அழகு பதுமையாக வருகிறார். காதல் என்று ஊர் சுற்றாமல் கதாபத்திரமாக மாறி ஜெயம் ரவிக்கு கைகொடுக்கிறார்.
விளைந்த பொருட்களை மார்க்கெட்டுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பிய ஜெயம் ரவியின் உழைப்பை முடக்க கார்ப்பரேட் முதலாளி செய்யும் சதிகளை முறியடித்து வென்று காட்டுகிறார் ரவி.
படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். விவசாயத் துக்கு முக்கியத்துவம் கொடுத் திருக்கும் இயக்குனருக்கு அப்ளாஸ் கிடைக்கிறது.
டி.இமான் இசை யில் வந்தே மாதரம், தமிழன் என்று சொல்லடா என உணர்ச்சி ததும்பும் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
பூமி-  போராளி விவசாயி

Leave A Reply

Your email address will not be published.