பூமிகா பட இயக்குனர் ரத்தீந்திரன் பேட்டி

1

ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமான ‘பூமிகா’ திரைப்படம் ஆகஸ்ட் 23.08.2021 Netflix மற்றும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 22.08.2021 வெளி யாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது

இந்த படத்தை ரதீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கி யுள்ளார்.இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இத்தாலிய ஒளிப்பதி வாளர் ராபர்டோ ஜஸாரா ஒளிப்பதிவு, பிருத்வி சந்திரசேகரின் இசை மற்றும் ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் ஆகியவை அடங்கும் மற்றும் இந்த திரைப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த், பார்வதி
நடிப்பில் வெளியான Navarasa Webseries -ன் ஒரு பாகமான
“இன்மை” திரைப்படமும் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கியதே.தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர்  மணிரத்னத்து ரத்தீந்திரன் இத்தருணத்தில் தன் நன்றியினை தெரிவித்துள்ளார்
“பூமிகா” திரைப்படத்தின் இயக்குனர்
ரதீந்திரன் ஆர் பிரசாத் நீண்ட கால காத்திருப் புக்கு பின் கதவு திறந்தது
என்றும் கடந்த இரண்டு நாட்களாக நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில்(Netflix India) நல்ல வரவேற்பை பெற்று Top 10 Movies India-வில் இந்தி பதிப்பில் முதல் இடத்திலும் தமிழ் பதிப்பில் ஐந்தாவது இடத்திலும் Trending-ல் இருந்து வருகிறது என்றும் தனது மகிழ்ச்சியை அவரது வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளது மட்டும்மில்லாது தன்னுடைய எல்லா படைப்புகளிலும் கூட இருந்து வாழ்த்திய மற்றும் ஊக்கபடுத்திய அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றிகலந்த வணக்கத்தை தெரிவித்து உள்ளார்.

நன்றி

இயக்குனர்: ரதீந்திரன் ஆர் பிரசாத்

வின்சன் C.M. PRO

Leave A Reply

Your email address will not be published.